விருதுநகர்

பழுதடைந்த மின் மோட்டாரை  சீரமைக்கக் கோரி மனு

DIN

விருதுநகர் 18-ஆவது வார்டில், பழுதான ஆழ்துளை கிணறுடன் கூடிய மின் மோட்டாரை சீரமைக்கக் கோரி அப்பகுதியினர் நகராட்சி ஆணையாளர் சந்திர சேகரனிடம்  திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 18-ஆவது வார்டு பாறைப்பட்டி தெருவில் 10 நாள்களுக்கு ஒருமுறையே நகராட்சி குடிநீர் வழங்கப்படுகிறது. வீட்டு தேவைகளுக்கான உப்பு நீரை, வாசக சாலை அருகேயுள்ள ஆழ்துறை கிணறுடன் கூடிய மின் மோட்டார் மூலம் எடுத்து வந்தோம். அதில் உள்ள மின்மோட்டார் 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. இதை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. எனவே, பழுதடைந்த மின் மோட்டார் மற்றும் அடிகுழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.  
இதையடுத்து ஆணையாளர், மின் மோட்டாரை பார்வையிட செவ்வாய்க்கிழமை பாறைப்பட்டி தெருவுக்கு வருவதாகவும், சிறிய பழுது என்றால் உடனே சரி செய்து தரப்படும். பெரிய பழுது இருந்தால், ஒரு வாரத்தில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT