விருதுநகர்

மணல் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை

DIN

சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை  வைப்பாற்றில் தொடரும் மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் மற்றும் வெம்பகோட்டை பகுதியில் உள்ள வைப்பாற்றின் மூலம் இப்பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது.  ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள சுமார் 110 கிணறுகள் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்கி வந்தன. ஆற்றின் குறுக்கே 10 உறை கிணறுகள் அமைத்து கோட்டைப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வந்தது.
இந்நிலையில், இரவு பகலாக நடைபெறும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உறைகிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. விவசாயக் கிணறுகளும் வறண்டுவிட்டன.
இதனால் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மேலும் வைப்பாற்று பகுதியில் உள்ள படந்தால், கொல்லபட்டி, மேட்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் மணலை அள்ளி சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்து, பகல் நேரங்களில் ஆற்றுக்குள்ளே வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயமும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மணல் திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT