சிவகாசியில் காவல்துறை விழிப்புணர்வு ஊர்வலம்
சிவகாசியில் நகர காவல்துறை சார்பில் புதன்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகர்சிவகாசியில் காவல்துறை விழிப்புணர்வு ஊர்வலம்
சிவகாசியில் நகர காவல்துறை சார்பில் புதன்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சிவகாசியில் நகர காவல்துறை சார்பில் புதன்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புகையிலைதடுப்பு, தலைகவசம், கந்துவட்டி, பாலியல் வன் கொடுமை ஆகியவை குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு இந்த ஊர்வலத்தை நகர காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளில் சென்று மீண்டும் பேருதுந்து நிலையம் வந்தடைந்தது.
இதில் புகையிலை, தலைகவசம்,பாலியல் வன்கொடுமையை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.