விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நவ. 13 முதல் 18 வரை குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 13 முதல் 18 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சைல்டு-லைன் அமைப்பினரால் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து, விருதுநகரில் சைல்டு-லைன் திட்ட இயக்குநர் அருணோதயம் எஸ்கின், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம், சேதிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர் நாராயணசாமி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடையே கூட்டாகத் தெரிவித்தது:
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது, பள்ளி இடைநிற்றலை கண்டறிந்து அக்குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது மற்றும் குழந்தைத் திருமணத்தை தடுப்பதே எங்களது முக்கிய நோக்கமாகும். மத்திய அரசின் அறிவிப்புப்படி நவம்பர் 13 முதல் 18 ஆம் தேதி வரை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2011 முதல் தற்போது வரை, காணாமல்போன 254 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. 
144 பிச்சை எடுத்த குழந்தைகள், 405 இடைநின்ற மாணவ, மாணவிகள் மற்றும் 136 குழந்தைத் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.    மேலும், 402 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர், தலையாரி, ஊராட்சி செயலர் உதவியை கேட்டுள்ளோம். வெளிமாநில மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் பற்றிய முழு விவரங்களை, அவரவர் பணிபுரியும் எல்கைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் வழங்க சம்பந்தப்பட்ட தொழிற்சாலை, நிறுவனங்கள் முன் வரவேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT