திருச்சுழி நூலகருக்கு சிறந்த நல்நூலகர் விருது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளைப் பொது நூலகத்தின் நூலகர் சு.பாஸ்கரனுக்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொதுநூலக இயக்ககம் சார்பில் சிறந்த நல்நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளைப் பொது நூலகத்தின் நூலகர் சு.பாஸ்கரனுக்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொதுநூலக இயக்ககம் சார்பில் சிறந்த நல்நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தினம் மற்றும் விருது வழங்கும் விழாவில் அவருக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இவ்விருதினை வழங்கிப் பாராட்டினார்.
விருது பெற்ற சு.பாஸ்கரன் கூறுகையில், திருச்சுழி கிளை நூலகத்திற்கென புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.41 லட்சம் நிதி வழங்கிய திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரம அறக்கட்டளைக்குத் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.