விருதுநகர்

ரூ 2,500 லஞ்சம்: சிவகாசியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

DIN

அரசு மானிய காசோலை வழங்க ரூ. 2,500 லஞ்சம் பெற்றதாக சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை  லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி வட்டம்,  மீனம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம்.  ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர். ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 14 இடங்களில் தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட செல்வம் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.  முதல் கட்டமாக 4 இடங்களில் பணிகளை
முடித்துள்ளார்.
ஒரு கழிப்பிடம் கட்ட அரசு ரூ. 12 ஆயிரம் மானியம்  வழங்குகிறது.  அதன்படி 4 கழிப்பிடங்களுக்கு ரூ. 48ஆயிரம் மானியம் செல்வத்துக்கு வழங்கப்பட வேண்டும்.  இந்த பணத்துக்கான காசோலையைத் தருவதற்கு ரூ. 3,000 லஞ்சம் வேண்டும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் செல்வத்திடம் கேட்டுள்ளார். இதற்கு இடைத்தரகராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீனாட்சி காலனியைச் சேர்ந்த மார்டின் (62) செயல்பட்டாராம். இதையடுத்து ரூ. 2,500 லஞ்சம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டதாம். இதைத் தொடந்து செல்வம் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தாள்களை செல்வத்திடம் கொடுத்தனுப்பினர்.  
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த சிவகுமாரிடம் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு அந்தப் பணத்தை செல்வம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் சிவகுமாரையும்,  உடனிருந்த இடைத்தரகர் மார்டினையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT