விருதுநகர்

"வாய்ப்புக்களை கண்டறிந்தால் வெற்றி'

DIN

வணிக வாய்ப்புகளை கண்டறிந்தால் தொழிலில் வெற்றி பெறலாம் என சென்னை லயோலா கல்லூரி வணிகவியல்துறை பேராசிரியர் எஸ்.இளங்கோவன் கூறினார்.
சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் வணிகவியல் சுயநிதிப்பிரிவு சார்பில் புதன்கிழமை வணிகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.நி கழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார்.
இதில் இளங்கோவன்  பேசியதாவது: வியாபாரத்தில் தேடுதல் இருக்க வேண்டும். வேலைகளை பகிர்ந்தளிக்க வேண்டும். நம்மிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் அறிவாற்றலையும்,  உழைப்பையும் பயன்படுத்தும் விதத்துக்கு ஏற்ப நிறுனவத்தின் வளர்ச்சிஇருக்கும். வணிக வாய்ப்புக்களை கண்டறிந்தால் தொழிலில் வெற்றி பெறலாம். உண்மையான உழைப்புக்கு களைப்புத் தெரியாது என்றார்.
முன்னதாக உதவிப் பேராசியர் ஜீவப் பிரியா வரவேற்றார். எஸ்.காயத்திரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டுகளை ஒருங்கிணைப்பாளர் மீ.ஜெயலட்சுமி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT