விருதுநகர்

விருதுநகர் நகராட்சியில் இணையதளம் செயல்படாததால் பணிகள் பாதிப்பு

DIN

விருதுநகர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக இணையதள சேவை பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
      விருதுநகர் நகராட்சியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒருங்கிணைந்த இணையதள சேவை மையம்  தொடங்கப்பட்டது. இதன் மூலம், சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெறுதல், சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இணையதளம் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டன.
        இந்நிலையில், கடந்த சில நாள்களாக இணையதள பாதிப்பு மற்றும் சர்வர் பிரச்னை காரணமாக வீட்டுவரி, சொத்துவரி மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால், தினந்தோறும் பொது மக்கள் நகராட்சிக்கு வந்து திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக, பொது மக்களுக்கும், நகராட்சி ஊழியரகளுக்கும் இடையே தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது.
    இதேபோல், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
    எனவே, இணையதள பாதிப்பு மற்றும் சர்வரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT