விருதுநகர்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில்'ஜாக்டோ- ஜியோ' அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

DIN

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை பேரணியாக வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
சிறப்புக் காலமுறை, தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியங்களை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த செப். 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வாயிலில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 330 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நீதிமன்ற வாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பேரணியாக வந்தனர். பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் அங்குள்ள கருப்பசாமி அருகே உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இப்போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT