அருப்புக்கோட்டை அருகே கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மழைநீர் வரத்துக் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மழைநீர் வரத்துக் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 3000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக பெரிய கண்மாயும், கட்டப்பு ஊருணியும் உள்ளன. இதில் அப்துல் கலாம் தெரு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சேகரமாகும் மழைநீர் செல்ல சுமார் 6 அடி அகல மழைநீர் வரத்துக்கால்வாய் உள்ளது.
இந்தக் கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பெரியகண்
மாய்க்கும், கட்டப்பு ஊருணிக்கும் நீர் செல்வது தடைப்பட்டுள்ளது.
இக்கால்வாயை சீர் செய்து விட்டால் மழைக்காலத்தில் எளிதில் கண்மாய்களில் சேர வழிகிடைக்கும். எனவே கால்வாயை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.