விருதுநகர்

கட்டட வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் மற்றும் உதவியாளர் கைது

தினமணி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு கட்டுவதற்கான வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்தவர் இளங்கோ, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முகவூரில் வசிக்கும் இவரது தந்தையின் இடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்து, இவர் செட்டியார்பட்டி ஊராட்சி அலுவலகத்தை நாடியுள்ளார். கட்டடம் கட்டுவதற்கு வரைபட ஒப்புதல் பெற அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை 7,240 ரூபாயை 3 தவணைகளாக வங்கி மூலம் செலுத்தியுள்ளார்.     இருப்பினும், இளங்கோவுக்கு வரைபட ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து செட்டியார்பட்டி பேரூராட்சி வரி வசூலிப்பாளர் காமராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒப்புதல் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.      இது குறித்து இளங்கோ, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், டி.எஸ்.பி. சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய காண்டீபன், பூமிநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர், பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். 
    அங்கு, தண்ணீர் திறந்துவிடும் தனது உதவியாளர் சதீஷ் என்பவரிடம் பணத்தை கொடுக்குமாறு இளங்கோவிடம் வரி வசூலிப்பாளர் காமராஜ் தெரிவித்துள்ளார். அதையடுத்து, இளங்கோ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை சதீஷிடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சதீஷ் மற்றும் காமராஜை கையும் களவுமாகப் பிடித்தனர்.     லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT