காவல் துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நகர்குழுச் செயலாளர் காத்தமுத்து தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ், முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரமோகன், ஒன்றியச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது காத்தமுத்து பேசியதாவது:
தூத்துக்குடியில் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தூத்துக்குடி மாநகர் காவல் அதிகாரி அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் கட்சித் தொண்டர்கள் மீது போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெறவேண்டும் என்றார். பெண்கள் உள்பட சுமார் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.