விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் நியமிக்கக் கோரிக்கை

DIN

சிவகாசி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணியில் இருந்து வந்தனர்.
இப் பிரிவில் தினமும் நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி சுமார் 100 முதல் 130 பேர் வரை சித்த மருத்துவப் பிரிவுக்கு வருகிறார்கள். முதியவர்கள் மூட்டுவலி, கால்வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வருகிறார்கள். மேலும் தோல்நோய் உள்ளிட்டவைகளுக்கும் பலர் வருகிறார்கள். குறிப்பாக கிராமத்தினர் சித்தமருத்துவப் பிரிவுக்கு அதிகமாக வருகின்றனர். இந்த பிரிவில் பணியில் இருந்த சித்த மருத்துவர் ஓராண்டுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் புதிய மருத்துவர் யாரும் நியமிக்கப்படவில்லை.
தற்போது விருதுநகரிலிருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் ஒரு சித்த மருத்துவர் வந்து செல்கிறார்.
அனைத்து நாள்களும் மருத்துவர் இருந்தால்தான் நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற இயலும். எனவே சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப்பிரிவுக்கு ஒரு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உதவியாளர் பணியிடமும் கடந்த ஒன்றரையாண்டுகளாக காலியாக உள்ளது.
தற்போது ஒரு மருந்தாளுனர் மட்டுமே பணியில் உள்ளார். எனவே ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT