விருதுநகர்

பாப்புலர் பிரண்ட் அமைப்புக்குத் தடை: ராஜபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அந்த அமைப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கவரப்பட்டதாக கூறி ஜார்கண்ட் மாநில அரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை அந்த மாநிலத்தில் தடை செய்துள்ளது. இதையடுத்து தங்களது அமைப்புக்கு தடை விதித்த பாஜக அரசைக் கண்டித்தும், விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும் ராஜபாளையம் நேரு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அருப்புகோட்டை, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக வை கண்டித்தும், ஆர். எஸ். எஸ். அமைப்பை கண்டித்தும், தங்களது அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் சாசனம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை பாஜக அரசு மீறியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது குற்றம் சாட்டப் பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT