முகப்பு
விருதுநகர்

சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம்

சாத்தூர் பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:54 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

சாத்தூர் பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
வருவாய்த் துறை சார்பில் நடைபெறும் இந்த முகாம், சாத்தூர் வருவாய் குறுவட்ட பகுதிகளான நென்மேனியில் உள்ள சமுதாயக்கூடத்தில் திங்கள்கிழமையும், சாத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் படந்தால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், செவ்வாய்க்கிழமை நள்ளி கிராம விவசாயிகளுக்கு ஒடைபட்டி பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்திலும், புதன்கிழமையும் இந்த முகாம்கள் நடைபெறும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.