முகப்பு
செய்திகள்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!

நடிகை சம்யுக்தா மேனன் பகிர்ந்த படப்பிடிப்பு அனுபவம் குறித்து...

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:56 PM
தி பிளாக் கோல்டு படப்பிடிப்பில் நடிகை சம்யுக்தா மேனன். - படங்கள்: இன்ஸ்டா / சம்யுக்தா மேனன்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:03 PM

நடிகை சம்யுக்தா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “திரைப்படம் என்பது ஒரு மனிதரின் பயணம் மட்டுமே அல்ல; அதில் பல்லாயிரக்கணக்கானோரின் பங்கிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

கேரளத்தில் பிறந்த நடிகை சம்யுக்தா மேனன் பாப்கார்ன் என்ற மலையாள படத்தில் அறிமுகமானாலும் தீவண்டி என்ற படமே அவருக்கு நாயகி என்ற அந்தஸ்தைக் கொடுத்தது. பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:11 PM

தமிழில் களரி, எரிடா, வாத்தி படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார். தற்போது, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரே நேரத்தில் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், தெலுங்கில் யோகேஷ் கேஎம்சி இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவந்த பான் இந்திய திரைப்படமான ’தி பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தததாக சம்யுக்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இரண்டு நாள்களுக்கு முன்னதாக பிளாக்கோல்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. எனது இதயம் நிறைவடைந்தது. சினிமா எப்போதும் ஒரு மனிதரின் பயணமாக இருப்பதில்லை. கணக்கில்லாத பலரது கைகள், இதயங்கள், அனைத்து துறைகளின் நோக்கமும் இணைந்து ஒரே பாதையில் பயணிப்பது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:45 PM

நாங்கள் இங்கு உருவாக்கி இருப்பது கூட்டு முயற்சியின் ஆன்மா. இதற்கு நான் ஆழ்மனதில் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இயக்குநருக்கு நன்றி. உங்களது நம்பிக்கையும் வழிகாட்டுதலும் வார்த்தைகளால் அடக்கிவிடமுடியாது. மஞ்செரியல் எங்களைப் பலவிதங்களில் சோதித்தது. சூரிய வெப்பம் 40-45 டிகிரி செல்சியஸில் இருக்கும். இருந்தும் படக்குழுவினர் ஆர்வத்துடன் நோக்கத்தை நோக்கி உழைத்தனர்.

இது மாதிரியான அர்பணிப்பைப் பார்ப்பது அரிது. படக்குழுவில் ஒவ்வொருவரும் நினைத்தும் பெருமையாக இருக்கிறது. நடக்க முடியாததை நிகழ்த்தி காட்டியுள்ளார்கள். என் தனிப்பட்ட குழுவினர் எனக்கு பலமாக அமைந்தார்கள். சூரிய வெப்பத்தில் எனது உடல் நீரிழப்பு, வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்தது.

சரியான மனிதர்கள் சரியான நேரத்தில் உடனிருப்பது மிகவும் அழகானது. இதை எழுதும்போது திருப்பதியில் இருக்கிறேன். எனது இதயத்தில் நன்றியுணர்வு மட்டுமே. எனக்குத் தேவையானபோது மக்களிடம் இருந்து நம்பிக்கை, ஆதரவு, எல்லாமே கிடைத்துள்ளது என்றார்.

summary

Cinema is never a one person journey says samyuktha menon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.