கயல் தொடரில் இணைந்த ஜிஷ்ணு மேனன்!
கயல் தொடரில் இணைந்த ஜிஷ்ணு மேனன் குறித்து...
கயல் தொடரின் புதிய பாத்திரத்தில் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.
கயல் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இதனைடையே, கயல் தொடரின் கதைக்களத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது. இதனால், கதையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடரில், சக்திவேல் தொடர் நடிகை அவள் சந்தியா, ராஜா ராணி - 2, சண்டக்கோழி உள்ளிட்ட நடிகர்களில் நடித்து பிரபலமான ரியா விஸ்வநாதன், எங்கேயும் எப்போதும், ரம்மி, சீமத்துரை உள்ளிட்ட படங்கள் மற்றும் சிங்கப்பெண்ணே, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட தொடர்களில் நடித்த நடிகை பேபி ஜாய்ஸ் உள்ளிட்ட பலர் புதிதாக நடிக்கவுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.
யார் இந்த ஜிஷ்ணு மேனன்?
சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். இவர், ரோஜா - 2 தொடரில் நடித்திருந்தார்.
அண்மையில், நிறைவடைந்த செல்லமே செல்லமே தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது கயல் தொடரில் முக்கிய பாத்திரத்தில் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.
Actor Jishnu Menon has joined the Kayal series in a new role.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.