விருதுநகர்

"கல்வி மூலம் தான் குற்றமற்ற சமுதாயம் உருவாகும்'

DIN

கல்வி மூலம் தான் குற்றமற்ற சமுதாயம் உருவாகும் என கல்லூரி திறப்பு விழாவில்  விருதுநகர் ஆட்சியர் அ. சிவஞானம் பேசினார்.
    விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே நோபிள் பெண்கள் கலைக் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு நோபிள் குழுமத் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், குழும செயலர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், அவரது மனைவி கவுசல்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கல்லூரியை திறந்து வைத்தனர். 
    பின்னர் ஆட்சியர் பேசியதாவது:  மாணவிகள் புத்தகத்தை மட்டும் படிக்காமல் அனுபவ மற்றும் உலக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.கல்வி மூலம் தான் குற்றமற்ற சமுதாயம் உருவாகும். எனவே, மாணவர்கள் தங்களது கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். 
  இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திட்ட இயக்குநர் சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், அருப்புக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செல்லப்பா, அருப்புக்கோட்டை காவல் துணை கணகாணிப்பாளர் தனபால், சுழற் சங்கத் தலைவர் குருசாமி,  கணக்கு தணிக்கையாளர்  பாலசந்தர், பொறியாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கல்லூரி அலுவலகம், வகுப்பறை, நூலகம், ஆய்வகம், கருத்தரங்க அறை முதலானவற்றை திறந்து வைத்தனர். மேலும், கல்லூரி மாணவிகள் பெற்றோர், நோபிள் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர். 
  முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் வேலுமணி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT