விருதுநகர்

சாத்தூரில் பன்றிகள் வளர்க்கத் தடை

DIN

சாத்தூர் நகராட்சிப் பகுதியில் பன்றிகள் வளர்க்கத் தடை விதிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
     இது குறித்து சாத்தூர் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாத்தூர் நகராட்சிப் பகுதியில் நடமாடும் பன்றிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து பொதுமக்களிடமிருந்தும் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. 
    எனவே, நகராட்சிஅதிகாரிகளின் ஆலோசனையின்பேரில், நகர் பகுதிகளில் பன்றிகள் வளர்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பன்றிகள்வளர்ப்பவர்கள் நகர எல்லைக்கு அப்பால் குடில்கள் அமைத்து, சுகாதாரக்கேடு ஏற்படாத வண்ணம் பன்றிகளை வளர்க்க வேண்டும். 
    சாத்தூர் நகராட்சிப் பகுதிக்குள் விதிகள் மீறி வளர்க்கப்படும் பன்றிகளையும், சுற்றித் திரியும் பன்றிகளையும் நகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பன்றிகளை வளர்ப்பவர்கள் மீதும் நகராட்சி சட்டவிதிகளின்படிநடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT