எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு
விருதுநகர் மாவட்ட எஸ்.டி.பி. ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த தேர்தலுக்கு அதிகாரியாக இக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ
விருதுநகர் மாவட்ட எஸ்.டி.பி. ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கு அதிகாரியாக இக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ .முஜிபுர் ரஹ்மான் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மகபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.
இதில்,மாவட்ட தலைவராக முகமது ஷாஜஹான், மாவட்ட பொதுச் செயலாளராகசேக் முகமது,மாவட்ட பொருளாளராக, முகமது தாஹா தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக முகமது ரபிக், காதர் ஒலி,அப்சர் அலி,அகமது காசிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள்.