சாத்தூர் அருகேவிநாயகர் கோயிலை அகற்றவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டம்
சாத்தூர் அருகே விநாயகர் கோவிலை அகற்றுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் கோட்டாட்சியர்அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
சாத்தூர் அருகே விநாயகர் கோவிலை அகற்றுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் கோட்டாட்சியர்அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தளாம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சிலோன்காலனி பகுதியில் சாலையின் குறுக்கே விநாயகர் கோயில் உள்ளது.இந்த கோயில் ஆக்கிரமிப்பில் அமைந்துள்ளதாகவும் அதனால் இக்கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிலோன்காலனிபகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும்,பெண்களும் விஷ்வஹிந் பரிஷ்த் மாவட்ட பொருப்பாளர் கலையரசன் தலைமையில் வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திங்கள் கிழமை வந்தனர். அப்போது கோட்டாட்சியர் இல்லை.
எனவே மனு அளிக்காமல் செல்ல மாட்டோம் என கூறி அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் மனு அளித்தனர்.
முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தையடுத்து கிராமத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.