ஸ்ரீவிலி.யில் மோட்டார் சைக்கிள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டதாக திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டதாக திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கா.விக்னேஷ் (22). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். காலையில் வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளைக் காணவில்லையாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.