முகப்பு
விருதுநகர்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் சாவு

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

Updated On : 22 மே, 2018 at 12:27 AM
பகிர்:

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது வீட்டுக்கு நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் வசிக்கும் இவரது அண்ணன் வெள்ளைச்சாமி என்பவரது மகன் அரவிந்த் (8) பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் வந்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரவிந்தை காணாமல் பாக்யராஜ் பல இடங்களிலும் தேடினார். அப்போது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டிருந்த கழிப்பறை கழிவுநீர் தொட்டியில் அரவிந்த் சடலமாக கிடந்தார்.
இதையடுத்து போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பாக்யராஜின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் அரவிந்த் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.