முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மே, 2018 at 11:57 PM
பகிர்:

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி ஞானகிரி சாலைப் பகுதியைச் சேர்ந்த திருவடி மகன் தேவதாஸ் (21). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாயார் சிவகாசியில் வசித்து வருகிறார். விடுமுறைக்கு சிவகாசி வந்த தேவதாஸ், வீட்டைப் பூட்டி விட்டு தனது தாயாருடன் அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிக்கு சென்று விட்டாராம். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் வீட்டுக் கதவு திறந்திருப்பதாக அவருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 3.5 கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேவதாஸ் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.