தனியார் குடிநீர் வாகனங்களை ஆய்வு செய்யக் கோரிக்கை
சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் நகர் பகுதியிலிருந்தும், கிராம பகுதியிலிருந்தும் கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து குடிநீர் தொட்டியில் சேமித்து, குடம் 12 ரூபாய் என சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாகனங்களும், அவற்றை எடுத்து வரும் குடிநீர்த் தொட்டிகளும் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யப்படாமலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே குடிநீர் வாகனங்கள் மற்றும் தொட்டிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.