மழலையர் பள்ளி சார்பில் கேரளத்துக்கு நிதி உதவி
கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
இப்பள்ளியில் பயிலும், 3 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகள், தங்களுக்கு பெற்றோர் அளித்த சிறு தொகையை நிவாரணமாக வழங்கினர். மேலும் ஆசிரியர்கள் பங்களிப்புடன் ரூ. 8,600 சேகரிக்கப்பட்டது.
அதனுடன் பள்ளி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் ரூ.1400, பள்ளியின் பொருளாளர் ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு, பள்ளித் தலைவர் காஜாமைதீனிடம் ஒப்படைத்து, கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.