விருதுநகர்

அதிவேக பேருந்துகளால் விபத்து அபாயம்

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகருக்குள் அதி வேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகளால் விபத்து அபாயம் இருந்து வருகிறது.
அருப்புக்கோட்டை நகருக்குள் வரும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில்லை. நகருக்குள் அனுமதிக்கப்பட்ட இருபது கிலோமீட்டர் வேகம் என்பதைக் கடைப்பிடிக்காமல் இத்தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் பல்வேறு வாகன விபத்துக்கள் நேருவதுடன் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. எனவே போக்குவரத்துப் போலீஸார் தலையிட்டு நகருக்குள் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கின்றனவா எனக் கண்காணிப்பதுடன், அனுமதிக்கப்பட்ட அளவை விட  அதிவேகத்தில் செல்லும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT