விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மழை

DIN

அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்ததால் விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்சியடைந்தனர்.
  கடந்த சில நாள்களாக பகலில் வறண்ட வானிலையுடன் கடும் வெயிலும் காணப்பட்ட நிலையில், மாலை சுமார் 5 மணி முதல் சுமார் அரைமணி நேரம் பலத்த காற்றுடன், இடி மின்னல் இன்றி மிதமான மழை பெய்தது. 
இம்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் பெய்த மழையின்காரணமாக மானாவாரி விவசாயிகள் தீவிரமாக உழவுப்பணி மேற்கொண்டு விதைத்திருந்ததால், இம்மழை பயிர்கள் நன்கு
வளர உதவும் என விவசாயிகள் தெரிவித்தனர். 
அத்துடன் இம்மழைக்குப் பின்னர் இதமான குளிர்ந்த காற்றுடன் கூடிய தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT