விருதுநகர்

ராஜபாளையத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு

ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ரூ.9.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள

DIN

ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ரூ.9.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புக் கட்டடத்தினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே. தஹில் ரமணி புதன்கிழமை  திறந்து வைத்தார். 
 பின்னர் மதுரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாசியில் ரூ.16.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புக் கட்டடம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றக் கட்டம் ஆகியவற்றின் கல்வெட்டுகளையும் அவர் திறந்து வைத்தார்.
 பின்னர் அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.49.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்புக் கட்டடத்துக்கும் அடிக்கல் நாட்டினார். 
 இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா க.தஹில் பேசியது:  நீதிபதிகள் பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இறுதி பாதுகாவலர்கள். 
 நீதித் துறையின் சட்ட முதுகெலும்பாக அமைந்திருக்கும் நீதிபதிகள், நீதித்துறை அமைப்பின் தூண்களாக இருக்கிறார்கள். நீதித்துறையில் பெண்கள் நுழைவது வரவேற்கும் செயலாகும். சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு பெண்கள் 50 சதவிகிதம் நிரப்பப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, அப்துல் குட்ஹாஸ், புகழேந்தி மற்றும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT