விருதுநகர்

ஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்

DIN

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகலான சாலையின் அகலத்தை அகலப்படுத்த வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்குள்பட்டது  ஏழாயிரம்பண்ணை. இப் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
இப்பகுதியில் இருந்து சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டிக்கு செல்லும் வாகனங்கள் ஏழாயிரம்பண்ணை கடைவீதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதுதவிர
 பட்டாசு தொழிற்சாலை வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பகுதியைக் கடந்துதான் செல்கின்றன.
இப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர்  அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப குறுகலான சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இச்சாலையில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்பகுதியில் பள்ளிகள், வங்கி, கோயில்கள் உள்ளன. இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில்  பட்டாசு தொழிற்சாலைகளின் வாகனங்களும் அதிக அளவில் செல்வதால் அடிக்கடி போகக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
மேலும் இப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்படும் போது, காயமடைந்தவர்களை ஏழாயிரம்பண்ணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் முதலுதவி செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.
எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் இப்பகுதியில் உள்ள சாலையை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியது: ஏழாயிரம்பண்ணையில் கடைவீதி சாலையை அகலப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான்கு முக்கு பகுதியாக இந்த கடைவீதி அமைந்துள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT