விருதுநகர்

திருச்சுழி அருகே நீதிமன்ற உத்தரவின்பேரில்  அம்மன் கோயிலில் 2 மணி நேரம் திருவிழா

DIN

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் அமைந்துள்ள இறங்கி முத்தம்மன் கோயிலில், நீதிமன்ற உத்தரவின்படி, காவல் துறை பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரத்தில் திருவிழா நடத்தி முடிக்கப்பட்டது.
      தொப்பலாக்கரை கிராமத்தில் இறங்கி முத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. அதில், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வீடுகள் மீது கல்வீசி வன்முறை நடைபெற்றதால், வருவாய்க் கோட்டாட்சியர் கோயில் திருவிழாவுக்கு தற்காலிக தடைவிதித்தார். 
      இந்நிலையில், தற்போது கோயில் திருவிழா நடத்த அனுமதி கோரி கிராமத்தைச் சேர்ந்த  ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
 அதன்படி,    ஒரு தரப்பினருக்குக் கோயிலில் விழா நடத்த, அவர்கள் விரும்பும் நாளில் 2 மணி நேரம் மட்டும் அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
     அதன்படி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை மாலை 4  மணியிலிருந்து 6 மணி வரை கோயிலில் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் திருவிழா அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT