விருதுநகர்

என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் விளையாட்டு விழா

DIN

ராஜபாளையம் ராமச்சந்திர ராஜா அறக்கட்டளைக்குள்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமையும், மஞ்சம்மாள் நினைவு தொடக்கப் பள்ளிக்கு புதன்கிழமையும், மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வியாழக்கிழமையும் என 3 நாள்கள் நடைபெற்றன. 
அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளை, ராஜபாளையம் சுங்கத் துறை ஆணையர் பாண்டியராஜ் தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் தீபச் சுடரை, ராமச்சந்திரராஜா குருகுல பள்ளித் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா ஏற்றிவைத்தார்.
விழாவில், தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி, பள்ளிக் கொடிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி (பொறுப்பு) அலுவலர் இசபெல்லா, நகர்நல அலுவலர் சரோஜா, மானேஜிங் டிரஸ்டி கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமையாசிரியர் ரமேஷ், கல்லூரி முதல்வர் அகஸ்டின் ஜோதிமணி, சுதா ஆகியோர் ஏற்றி வைத்தனர். 
இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், சிலம்பம், வேல் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதற்கான ஏற்பாடுகளை, 3 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT