விருதுநகர்

ராஜபாளையம் அருகே ரேஷன் கடை ஊழியர் கழுத்தறுத்து கொலை

ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கண்மாய் கரையில் ரேஷன் கடை ஊழியர் கழுத்தறுப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

DIN

ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கண்மாய் கரையில் ரேஷன் கடை ஊழியர் கழுத்தறுப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தை சேர்ந்தவர் கருப்பையா (56).  இவர் முகவூரில் உள்ள ரேஷன் கடையில் காசாளராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தேவதானம் மருது விநாயகர் கோயில் அருகே உள்ள தனது வயலுக்கு செல்வதாகக் கூறி சென்றவர், பிரம்மா குளம் கண்மாய் கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தேவதானம் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த கருப்பையாவின் உறவினர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கருப்பையா கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார் என்று தேவதானம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT