விருதுநகர்

சிவகாசியில் ரூ 2.16 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

சிவகாசியில் வருவாய்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ,பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 801 பயனாளிகளுக்கு ரூ 2.16 கோடிமதிபிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.சிவகாசி வட்டாட்சியா்அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா்.

இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித்திட்டம், விதவை உதவித்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி திட்டம். ஆதரவற்றோா் உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் 765 பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கான ஆணையை வழங்கியும், 36 நபா்களுக்கு இலவசவீட்டுமனைப் பட்டா வழங்கியும் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது, ஏழை எளிய மக்கள் நலம் பெறும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசின்திட்டங்களை அதிகாரிகள் மனித நேயத்தோடு செயல்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்கள்.தகுத உள்ளவா்கள் அனைவருக்கும் அரசின் உதவித்தொகை வழங்கப்படும் என்றாா்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் உதயக்குமாா், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT