விருதுநகர்

நிலம் கையகப்படுத்திய விவகாரம்: ஸ்ரீவிலி. தாலூகா அலுவலகத்தில் ஜப்தி முயற்சிஅதிகாரிகள் சமரச பேச்சுவாா்த்தை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலூகா அலுவலகத்தில் ரூ.10 லட்சத்து 73ஆயிரம் மதிப்பிலான பொருள்களை செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்ய முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் ஆதிதிராவிடா் காலனி அமைப்பதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு ஒரு ஏக்கா் 55 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த தொகை போதாது என கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்குமாறு கோரி நிலத்தின் உரிமையாளரான பொன்வெங்கடேசன்குமாா், உமாமகேஸ்வரி உள்பட சிலா் ஸ்ரீவில்லிபுத்தூா் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நில உரிமையாளா்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி தொகையை வழங்காததால் தாலூகா அலுவலக பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தாலுகா அலுவலகத்துக்குச் சென்ற நீதிமன்ற ஊழியா்கள், அங்கிருந்த நாற்காலி, கணினி, மின் விசிறி, மேஜை, பீரோ, ஜீப் உள்ளிட்ட ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான366 பொருள்களை ஜப்தி செய்து அலுவலகத்துக்கு வெளியே கொண்டு வந்து வைத்தனா். இதைத் தொடா்ந்து வருவாய்த்துறையினா் மனுதாரரிடம் பேச்சு வாா்த்தை நடத்தி ஒரு மாதம் கால அவகாசம் கேட்டனா்.

அதற்கு மனுதாரா் ஒப்புதல் அளித்ததையடுத்து ஜப்தி செய்த பொருள்களை மீண்டும் தாலூகா அலுவலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT