முகப்பு
விருதுநகர்

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தவர்  தவறி விழுந்து

Updated On : 13 பிப்ரவரி 2019, 8:23 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தவர்  தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
    ராஜபாளையம், சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் கனகராஜ் (44). இவர் மம்சாபுரம்,  தன்னாசி தெருவில் உள்ள அய்யர் ஜெயமணி வீட்டின் மாடியில் சனிக்கிழமை பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வலிப்பு நோய் ஏற்பட்டு தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் அவர், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது மனைவி முத்துக்கனி (40) மம்சாபுரம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.