விருதுநகர்

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்கக் கோரிக்கை

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அருப்புக்கோட்டை நகரின் புறநகர்ப்பகுதியான காந்தி நகர் வழியாக புறவழிச்சாலையான மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை செல்கிறது.  இச்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. 
இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அருகில் எம்.தொட்டியான்குளம் சாலைப்பிரிவில், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையை குறுக்காகக் கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து வந்தது. 
இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் சாலையைக் கடக்கத் தடை செய்து, போக்குவரத்துப் போலீஸார் வேலி  அமைத்தனர். ஆனால் சில மாதங்களில் இந்த வேலி மீண்டும் திறக்கப்பட்டது. எனவே மீண்டும் இச்சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சாலையைத் இருசக்கர வாகனத்தில்  கடக்க முயன்ற அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி  ஆசிரியர் மணிமாறன், கார் மோதியதில் உயிரிழந்தார். அதனால் இப்பகுதியில் விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT