விருதுநகர்

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் கழிவுநீர்  கலப்பதை தடுக்கக் கோரிக்கை

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க

DIN

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகாசி நகருக்கு நிலத்தடி நீராதாரமாக உள்ளது பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாயில் தற்போது கட்டட கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகின்றன. 
 மேலும் கழிவுநீரும் கலந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இக்கண்மாயில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவு நீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 இந்த கண்மாய்க்கு  நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

ஆஸி. வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா!

SCROLL FOR NEXT