முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் மான் வேட்டையாடியவர் கைது

ராஜபாளையம் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய இளைஞரை செவ்வாய்க்கிழமை வனத்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 7:43 am IST
பகிர்:

ராஜபாளையம் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய இளைஞரை செவ்வாய்க்கிழமை வனத்துறையினர் கைது செய்தனர்.
    ராஜபாளையம், மருதுநகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் விக்னேஷ்வரன் என்ற சுள்ளான்  (23).
    இவர் தென்றல்நகர், செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் வனப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வேளையில் 3 வயதுள்ள புள்ளி மானை வேட்டையாடி அதன் மாமிசத்தை கொண்டு வந்து தனது வீட்டில் வைத்திருந்தாராம். வேட்டைத் தடுப்பு காவலர்கள் விக்னேஷ்வரன் வீட்டில் சோதனை செய்ததில் மான் இறைச்சி  இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மான் வேட்டையாடிய இடத்திற்கு அழைத்து சென்று மண்ணில் புதைத்திருந்த மானின் தலை மற்றும் வேட்டையாட பயன்படுத்திய கம்பிச் சுருள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.