விருதுநகர்

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் தேருக்கு பூஜை

DIN

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம், ஆண்டாள் பிறந்த தினமான பூர நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. 
அதன்படி, இந்தாண்டு  ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வருகிறது. அன்று, மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக, தேருக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை அதிகாலை திருக்கோயில் அர்ச்சகர் ரகு பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள்  நடத்தினர். 
இதில், கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், நிர்வாக அலுவலர் இளங்கோவன் உள்பட பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT