விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவர் உள்பட 6 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள இ. முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வி (25). இவர் இதே ஊரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை கள் உள்ளனர். இந்நிலையில், பிரதீப் குமார் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவரது புகைப்படத்தை செல்லிடப்பேசியில் வைத்திருந்தாராம். இது குறித்து அவரிடம் முத்துச்செல்வி கேட்டதற்கு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மேலும், செல்வியை கூடுதலாக 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கி வருமாறு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்துச்செல்வி அளித்தப் புகாரின் பேரின் கணவர் பிரதீப் குமார், கணவரின் தந்தை ராஜ், தாய் சாந்தி, சகோதரிகள் சங்கீதா, கலா, கிரிஜா ஆகிய 6 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.