விருதுநகர்

ஆயிரங்கண் மாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரிலுள்ள புளியம்பட்டி-திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது

DIN


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரிலுள்ள புளியம்பட்டி-திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இக்கோயிலில் 99 ஆவது பங்குனிப்பொங்கல் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 30 ஆம் தேதி திருப்பொங்கல் விழாவும் மறுநாள் புதன்கிழமை அக்கினிச்சட்டியும்,  வியாழக்கிழமை தேர்த் திருவிழாவும் நடைபெற்றன. 
திருவிழாவின் 11 ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு தீப,தூப ஆராதனை நடைபெற்றதும் உற்சவராக பூப்பல்லக்கில் ஆயிரங்கண் மாரியம்மன் எழுந்தருளினார். 
அதனைத் தொடர்ந்து பாவடித்தோப்பு, புளியம்பட்டி, காந்தி திடல், வேலாயுதபுரம், திருநகரம் வழியாக பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 
அப்போது திரளான பக்தர்கள் அம்மனைக் கண்டு பக்தியுடன் வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT