விருதுநகர்

தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன் கைது

செலவுக்கு பணம் தர மறுத்த தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

DIN

செலவுக்கு பணம் தர மறுத்த தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
 சிவகாசி ராம நாடார் தெருவைச்  சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி வேல்முருகன் (53). இவரது மகன் முத்துப்பாண்டி(19). இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதாக தந்தை வேல்முருகனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்  முப்பதாயிரம் ரூபாய் வாங்கினாராம். அந்த பணத்தின் மூலம் மும்பை வரை சென்று விட்டு மீண்டும் சிவகாசி வந்து விட்டாராம். இந்நிலையில் சனிக்கிழமை, வெளிநாடு செல்லவேண்டும் என தந்தையிடம் ரூ.1 லட்சம் கேட்டாராம். அதற்கு தந்தை மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 
 அப்போது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து  பெட்ரோலை எடுத்து தந்தை மீது ஊற்றி தீ வைத்தாரம். இதில் பலத்த காயமடைந்த தந்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT