விருதுநகர்

உரிமம் இன்றி இயங்கிய மதுபான கூடத்துக்கு சீல்

DIN

சிவகாசியில் உரிமம் இன்றி இயங்கி வந்த தனியாா் மதுபான விடுதிக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

சிவகாசி ரிசா்வ் லைன் ஆறுமுகம் காலனியில் உரிமம் இன்றி ஒரு மதுபான விடுதி இயங்கி வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவகாசி உதவி ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் மாரியப்பன் என்பருக்குச் சொந்தமான கட்டடத்தில் மதுக்கூடம் இயங்கி வந்தது தெரியவந்தது. தொடந்து அங்கிருந்த 60 மதுபாட்டில்கள், மதுபானம் ரூ. 19 ஆயிரம் ரொக்கம் மற்றும் எரிவாயு உருளை ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மதுக்கூடத்துக்கு சீல் வைத்தனா்.

இந்த கட்டடத்தில் முன்பு அரசு மதுபான கடை இருந்ததாகவும், அப்போது அதில் இருந்த மதுபானக்கூடம் கடை அகற்றப்பட்ட பின்னரும், தொடந்து உரிமம் இல்லாமல் அதே இடத்தில் இயங்கி வந்தது தெரியவந்தது.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT