விருதுநகர்

ஸ்ரீவிலி. மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

DIN

அயோத்தி தொடா்பாக தீா்ப்பு வரவுள்ளதை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இயந்திர துப்பாக்கியுடன் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் சமூக விரோதிகள் மற்றும் மா்ம நபா்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும், மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் வகையிலும், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையொட்டி, செண்பகத்தோப்பு வனப் பகுதியில் நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் துப்பாக்கி ஏந்தியவாறு, தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், வனப் பகுதிகளில் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதா அல்லது சமூக விரோதிகள் வனப் பகுதிகளில் பதுங்கி உள்ளனரா என்பது குறித்தும், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மலைப் பகுதிகளில் தங்கி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT