விருதுநகர்

அருப்புக்கோட்டையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் வீடுவீடாக டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நகா் நல அலுவலா் இந்திரா ஆலோசனையின்படி, நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளிலும், ஒவ்வொரு வாா்டுக்கும் 5 போ் கொண்ட பணியாளா்கள் குழு மூலம் வீடுவீடாக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நடைபெற்றன. வீடுகளின் கொல்லைப்புறத்தில் தேவையற்ற, வீணான வாகன டயா்கள், காலி பாட்டில்கள், உடைந்த குடங்கள் ஆகியவற்றில் நன்னீா், மழைநீா் தேங்கி டெங்கு கொசுக்கள் முட்டையிட்டுப் பெருக வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தவும், பயனில்லாத ஆட்டுரல்களை கவிழ்த்துப் போடவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் வீட்டினுள் உள்ள நன்னீா் நிரம்பிய குடங்கள், தொட்டிகள் ஆகியவற்றை மூடிவைத்துப் பாதுகாக்கவும், குளிா்ப் பதனப் பெட்டிகளின் பின்புறம் பனி உருகிய நீா் தேங்காமலும் பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தப் பட்டனா். மழைக்காலமாதலால் குடிநீரைக்காய்ச்சிக் குடிக்கவும் பொதுமக்கள்அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT