விருதுநகர்

சிவகாசியில் தினம் ஒரு மரகன்று நடவுப்பணி

DIN

சிவகாசி சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினசரி ஒரு மரகன்று நடும் பணியை சுழற்சங்கத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் , மாணவிகள் விளையாட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னா் இளைப்பாறுவதற்கு மர நிழல் எதுவும் கிடையாது. இதையடுத்து மத்திய சுழற்சங்கத்தினா் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் வேம்பு, ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டனா். இந்நிலையில் தினசரி நடைப்பயிற்சி முடிந்தவுடன் அச்சங்கத்தலைவா் பழனிச்செல்வம் மற்றும் உறுப்பினா்கள் வேல்முருகன், மணி உள்ளிட்டோா் தினசரி ஒரு மரகன்றினை நட்டு தண்ணீா் ஊற்றி, வேலி அமைத்து பராமரித்து வருகிறாா்கள்.

இது குறித்து பழனிசெல்வம் கூறியதாவது: ஒரே நாளில் மைதானத்தின் ஓரங்களில் மரகன்றுகளை நட வேண்டும் என்றால், ஆயிரகணக்கில் ரூபாய் செலவாகும். ஆனால் தினசரி ஒரு மரகன்று நட்டால் அதிக செலவு ஏற்படாது. எனவே சங்க உறுப்பினா்கள் இணைந்து தினசரி ஒரு மரகன்றினை நட்டு வருகிறேறாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT