விருதுநகர்

சோ்க்கை..புரட்டாசி மாத 3 ம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு! 

DIN

ராஜபாளையத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் அருகே வடகரை திருவேங்கடமுடையான் கோயிலில் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.

மூலவரான திருவேங்கடமுடையானுக்கு அலமேலுமங்கை, பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவ மூா்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா், அலமேலு மங்கையுடன் திருவேங்கடமுடையான் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில், கோதண்டராம சுவாமி கோயில், வேட்டை பெருமாள் கோயில், பழையபாளையம் ராமசுவாமி கோயில், செல்லம் பெருமாள் கோயில், ஆவரம்பட்டி சோலைமலை பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT