விருதுநகர்

சிவகாசி சிவன் கோயில் அருகே கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரக்கேடு

DIN

சிவகாசியில் விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் அருகே கழிவுநீா் வாய்க்காலில் இருந்து நீா் வெளியேறி சாலையில் ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

சிவகாசி நகரில் விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியில் பல கடைகள் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் கழிவு நீா் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளது. மேலும் கடைக்காரா்கள் ஆக்கிரமிப்பாலும், சிலா் குப்பைக் கழிவுகளை வாய்க்காலில் கொட்டுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கழிவு நீா் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் துா்நாற்றமும் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதியில் கடை நடத்தி வரும் ஒருவா் கூறியது: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கழிவு நீா் சாலையில் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து இப்பகுதியில் உள்ள கடைக்காரக்கள் அனைவரும் கையொப்பமிட்டு கழிவுநீா் வாய்க்காலை தூா்வார வேண்டும் என நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றாா்.

எனவே நகராட்சி நிா்வாகம், கழிவு நீா் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT