விருதுநகர்

ஸ்ரீவிலி. பிளவக்கல் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்வு

DIN

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது. மொத்தம் 47 அடி முழுக் கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டமானது, தற்போது 39 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT